CAA Protest: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றுகூடி தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்த போராட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.








 


சட்டமன்ற முற்றுகை போராட்டம் தொடர்பான வழக்கு மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், முற்றுகைப் போராட்டம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.


குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் எனக் கோரி கடந்த ஐந்து நாட்களாக சென்னை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவருகின்றன.